நானும் சிங்கிள்தான்


நானும் சிங்கிள்தான்
x
தினத்தந்தி 25 Jan 2020 11:16 PM IST (Updated: 25 Jan 2020 11:16 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் சினிமாவின் பரபரப்பான ஜோடி நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் படமாகிறது. படம் நானும் சிங்கிள்தான் சினிமா முன்னோட்டம்.

“தமிழ் சினிமாவின் பரபரப்பான ஜோடியான நயன்தாரா-விக்னேஷ் சிவனின் காதலை கருவாக வைத்து ஒரு கதையை தயார் செய்துள்ளோம். இந்த ஜோடி, பலர் ஆசீர்வதிக்கும் காதலர்களாக இருந்தாலும், இப்போது வரை இந்த ஜோடியை எல்லோரும் ஆச்சரியமாகவே பார்க்கிறார்கள். நயன்தாரா-விக்னேஷ் சிவனின் காதல் கதையை திரைப்படமாக உருவாக்குகிறோம்” என்கிறார், டைரக்டர் கோபி. அவர் மேலும் கூறியதாவது:-

“கதாநாயகனின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான். அதனால், நயன்தாராவின் படத்தை தன் உடலில் பச்சை குத்திக் கொள்கிறார். நயன்தாரா மீதான மோகம் அவருக்குள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காதல் பேய் பிடித்து அலையும் அவர் என்ன ஆகிறார்? என்பதே திரைக்கதை.

படத்துக்கு, ‘நானும் சிங்கிள்தான்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. தினேஷ் கதாநாயகனாகவும், தீப்தி திவேஸ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், மனோபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக இருந்த ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைக் கிறார். கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.”
1 More update

Next Story