மாயநதி


மாயநதி
x
தினத்தந்தி 27 Jan 2020 5:59 AM IST (Updated: 27 Jan 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

அபி சரவணன், வெண்பா நடிப்பில் உருவாகி வரும் மாயநதி திரைப்படம் லட்சியத்தை அடைய போராடும் பெண்ணின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

லட்சியத்தை அடைய போராடும் மாயநதி ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி அஷோக் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை, டாக்டராவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண், இலக்குகள் எதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு சராசரி இளைஞன். இவர்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே ‘மாயநதி’. பதின்ம வயதில் இயல்பாக ஏற்படும் காதல் அல்லது இனக்கவர்ச்சியை கடந்து ஒரு பெண்ணால் தனது லட்சியத்தை அடைய முடிந்ததா? என்பதை யதார்த்தமாக கூறியுள்ளார் இயக்குனர்.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்து ஒரு பாடலையும் பாடியுள்ளார். பாடல்களை கவிஞர் யுகபாரதி எழுத, ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்ய, மயில் கிருஷ்ணன் கலை இயக்கத்தை கவனிக்க, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். தினேஷ் மாஸ்டர் இப்படத்தின் இரண்டு பாடலுக்கு நடன இயக்கம் செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மயிலாடுதுறை, பொறையாறு, தரங்கம்பாடி, திருக்கடையூர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 More update

Next Story