டகால்டி


டகால்டி
x
தினத்தந்தி 27 Jan 2020 5:01 PM GMT (Updated: 27 Jan 2020 5:01 PM GMT)

சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென் நடிப்பில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டகால்டி’ படத்தின் முன்னோட்டம்.

சந்தானம் கதாதாயகனாக நடிக்க அவருடன் முதன் முதலில் யோகிபாபு இணைய, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட வினியோகஸ்தருமான, எஸ்.பி.செளத்ரி தமது 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கும் படம் 'டகால்டி'.

சந்தானத்திற்கு ஜோடியாக பெங்காலி திரை உலகின் முன்னணி நட்சத்திரமான ரித்திகா சென் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு பட உலகின் பிரம்மானந்தம், ராதாரவி, ரேகா, ஹேமந்த் பாண்டே, மனோபாலா, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, சந்தானபாரதி இந்திப் பட உலகின் பிரபலமான நடிகர் தருண் அரோரா ஆகியோருடன் வெளிநாடுகளிலிருந்து வந்த மாடல் அழகிகளும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

விஜயநாராயணன் இசை, தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவு, டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு, சுவாமிநாதன் தயாரிப்பு.

ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

Next Story