ஓ மை கடவுளே


ஓ மை கடவுளே
x
தினத்தந்தி 1 Feb 2020 4:07 AM IST (Updated: 6 Feb 2020 11:03 PM IST)
t-max-icont-min-icon

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் முன்னோட்டம்.

அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஓ மை கடவுளே’. இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. அசோக் செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். மேலும் சின்னத்திரை புகழ் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

‘ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில், கவுதம் மேனன்!

த மிழ் பட உலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவர், கவுதம் வாசுதேவ் மேனன். இவர், சில படங்களில் கவுரவ வேடங்களில் நடித்து இருக்கிறார். சில படங்களில் வில்லன் நடிகர்களுக்கு இரவல் குரல் கொடுத்துள்ளார். விரைவில் திரைக்கு வரயிருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில், சிறப்பு தோற்றத்தில் வருகிறார். அசோக் செல்வன்-ரித்திகா சிங் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். ஜி.டில்லிபாபு தயாரிக்க அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி இவர் சொல்கிறார்:-

“காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்துக் கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. ‘ஓ மை கடவுளே’ படம் இன்றைய நாகரிக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இதில் அசோக் செல்வன்-ரித்திகா சிங் இருவரும் காதல் ஜோடியாக நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். இப்போது டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படம், காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.”
1 More update

Next Story