அடவி


அடவி
x
தினத்தந்தி 1 Feb 2020 10:25 PM IST (Updated: 1 Feb 2020 10:25 PM IST)
t-max-icont-min-icon

மலைவாசிகளின் வாழ்க்கையை படமாக்க “அடர்ந்த காட்டுக்குள் 35 நாட்கள் முகாமிட்ட படக்குழுவினர் மலைப்பிரதேச மக்களின் வாழ்க்கை, ‘அடவி’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. படத்தின் முன்னோட்டம்.

‘ஆழ்வார்,’ ‘திருடா திருடி,’ ‘கண்ணோடு காண்பதெல்லாம்,’ ‘கிங்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு இயக்குனராக இருந்து, இப்போது இயக்குனராக உயர்ந்திருக்கும் ரமேஷ் ஜி. இந்த படத்தை டைரக்டு செய்கிறார். கே.சாம்பசிவம் தயாரிக்கிறார். இருவரும் கூறியதாவது:-

“இந்த சமுதாயத்தில், இயற்கை வளங்கள் அனை வருடைய தேவைக்கும் போதுமானதாக இருக்கிறது. ஆனால், ஒரே ஒருவரின் பேராசையால், அந்த இயற்கை வளங்கள் என்ன ஆகின்றன? என்பதை உ:ணர்வுப்பூர்வமாக படம் பிடித்து இருக்கிறோம்.

வியப்பூட்டும் திருப்பங்களும், பசுமையான காட்சி அமைப்புகளும், அதிர வைக்கும் சண்டை காட்சிகளும் நிறைந்த படம், இது. அடர்ந்த காட்டுக்குள் 35 நாட்கள் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தினோம். புதுமுகங்கள் வினோத் கிஷன், அம்மு அபிராமி, ஆர்.என்.ஆர்.மனோகர், ராஜபாண்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.”
1 More update

Next Story