சோழநாட்டான்


சோழநாட்டான்
x
தினத்தந்தி 8 Feb 2020 11:46 PM IST (Updated: 8 Feb 2020 11:46 PM IST)
t-max-icont-min-icon

அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ‘சோழநாட்டான்’ என்ற வரலாற்று படத்தில், விமல் படத்தின் முன்னோட்டம் பார்க்கலாம்.

‘களவாணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, ‘கலகலப்பு’ உள்பட சில வணிக ரீதியிலான படங்களில் நடித்த விமல், அடுத்து ஒரு வரலாற்று படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் பெயர், ‘சோழநாட்டான்.’ இது, வரலாற்று பின்னணியில், முழுக்க முழுக்க அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திகில் படம். இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில், விமல் நடிக்கிறார். வரலாற்று கதையில் இவர் நடிக்கும் முதல் படம், இது.

அவருடன் காருண்ய கேதரின் என்ற அழகி, கதாநாயகியாக நடிக்கிறார். தென்னவன், நாகி நாயுடு, டேனியல் பாலாஜி, சென்ட்ராயன், போஸ் வெங்கட், சீதா ஆகியோரும் நடிக்கிறார்கள். மிக முக்கியமான ஒரு வில்லன் வேடத்தில், முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கிறார். பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா டைரக்டு செய்கிறார். பாரிவள்ளல் தயாரிக்கிறார்.
1 More update

Next Story