கன்னி மாடம்


கன்னி மாடம்
x
தினத்தந்தி 21 Feb 2020 1:13 AM IST (Updated: 21 Feb 2020 1:13 AM IST)
t-max-icont-min-icon

போஸ் வெங்கட் இயக்கத்தில் புதுமுகங்கள் ஸ்ரீ ராம், காயத்ரி நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னி மாடம் படத்தின் முன்னோட்டம்.

தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர் போஸ் வெங்கட். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் ஜெ இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
1 More update

Next Story