மாஃபியா - பாகம் 1


மாஃபியா - பாகம் 1
x
தினத்தந்தி 21 Feb 2020 1:41 AM IST (Updated: 21 Feb 2020 1:41 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் மாஃபியா படத்தின் முன்னோட்டம்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஃபியா’. குற்றப் பின்னணியில் திரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியதாவது: ‘மாஃபியா - பாகம் 1’ போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. அருண் விஜய் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியாக நடித்திருக்கிறார். இரண்டு வேறு வேறு குணங்கள் கொண்ட கதாப்பாத்திரங்கள் இடையே நடக்கிற போர் தான் இந்தப்படத்தின் மையக்கதை. இசை ஜேக்ஸ் பிஜாய், ஒளிப்பதிவு கோகுல் பினாய்.

பிரசன்னாவின் கேரக்டர் இந்தப்படத்தில் அடக்கி வாசிக்கிற மாதிரியானது. பிரியா பாவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார் என்று மொத்த படக்குழுவும் சொன்னதால் அவங்களை தேர்ந்தெடுத்தோம். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.  இப்படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்” என கூறியுள்ளார்.
1 More update

Next Story