அயலான்


அயலான்
x
தினத்தந்தி 25 Feb 2020 10:51 PM IST (Updated: 25 Feb 2020 10:51 PM IST)
t-max-icont-min-icon

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘அயலான்’ என்று பெயர் சூட்டப்பட்டதுமே அந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

‘அயலான்’ படத்தில் வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன்!
‘அயலான்’ என்பது வேற்றுகிரகவாசியை குறிக்கும். படத்தை டைரக்டு செய்பவர், ரவிகுமார். இவர், ‘இன்று நேற்று நாளை’ படத்தை டைரக்டு செய்தவர். ‘அயலான்’ பற்றி இவர் கூறுகிறார்:-

“அயலான் படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிக்கப்பட்டு விட்டது. மொத்த படப்பிடிப்பும் முடிய இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்பே மீதம் இருக்கிறது. ‘சயின்ஸ்பிக்‌ஷன்’ (அறிவியல்) புனை படமாக இது உருவாகிறது. படப்பிடிப்பின்போதே படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரகுல்பிரீத்சிங் நடிக்கிறார். யோகி பாபு, கருணாகரன் ஆகிய இருவரும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க, பிரபல இந்தி நடிகர் சரத் கேல்கர், ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஆர்.டி.ராஜா தயாரிக்க, படத்தை வெளியிடுபவர், கொட்டாப்படி ராஜேஷ்.

படத்தில், மாயாஜால காட்சிகள் நிறைய இடம் பெறுகின்றன.”
1 More update

Next Story