வெல்வெட் நகரம்


வெல்வெட் நகரம்
x
தினத்தந்தி 6 March 2020 2:36 PM IST (Updated: 6 March 2020 2:36 PM IST)
t-max-icont-min-icon

மனோஜ் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வெல்வெட் நகரம்’ படத்தின் முன்னோட்டம்.

'போடா போடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இவரது நடிப்பில் தற்போது ‘வெல்வெட் நகரம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் மனோஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார். மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். 
1 More update

Next Story