பிஸ்கோத்


பிஸ்கோத்
x
தினத்தந்தி 6 March 2020 3:53 PM IST (Updated: 6 March 2020 3:53 PM IST)
t-max-icont-min-icon

`சகலகலா வல்லவன்’ போல் கமல்ஹாசன் வேடத்தில், சந்தானம்! `பிஸ்கோத்’ படத்திற்கான முன்னோட்டம்.

ஆர்.கண்ணன் திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம், `பிஸ்கோத்.’ இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை பற்றி ஆர்.கண்ணன் சொல்கிறார்:-

``என் டைரக்‌ஷனில், `ஜெயம் கொண்டான்,’ `கண்டேன் காதலை’ ஆகிய படங்களில் சந்தானம் நடித்து இருக்கிறார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து இயக்கும் முதல் படம், இது. பிஸ்கட் கம்பெனியில் சாதாரண அடிமட்ட தொழிலாளியாக வேலை செய்து வந்த சந்தானம் எப்படி உயர் பதவிக்கு வருகிறார்? என்பதே இந்த படத்தின் கதை.

இதில், சவுகார் ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது, அவருக்கு 400-வது படம்.

இந்த படத்தில், சந்தானத்துக்கு மூன்று வேடங்கள் இருக்கிறது. அதில், சகலகலா வல்லவன் படத்தில் கமல்ஹாசன் போன்ற வேடமும் ஒன்று. அந்த வேடத்தில், அந்தக்கால பாணியில் ஒரு சண்டை காட்சியும் இருக்கிறது.

ஐதராபாத்தில், 18-ம் நூற்றாண்டு அரண்மனை போல் ஒரு அரங்கு அமைத்து, படப்பிடிப்பு நடைபெற்றது. கதாநாயகிகள் தாரா, அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா, ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்த காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.’’
1 More update

Next Story