முன்னோட்டம்
ராஜவம்சம்

ராஜவம்சம்
சசிகுமார் நிக்கி கல்ராணி கதிர்வேலு ஷாம் CS சித்தார்த்
சசிகுமார்-நிக்கி கல்ராணியுடன் அறிமுக இயக்குனர் கதிர்வேலு டைரக்டு செய்யும் `ராஜவம்சம்' படத்தில் நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறார்கள், படத்தின் முன்னோட்டம்.
Chennai
`சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் பிரபலமான சசிகுமார், நாடோடிகள், `குட்டிப்புலி,' `வெற்றிவேல்,' `கிடாரி' உள்பட இதுவரை 18 படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவருடைய 19-வது படத்துக்கு, `ராஜவம்சம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

இவர்களுடன் ராதாரவி, தம்பி ராமய்யா, விஜயகுமார், சதீஷ், மனோபாலா, ரமேஷ்கண்ணா, சிங்கம்புலி, யோகி பாபு, `கும்கி' அஸ்வின், ராஜ் கபூர், நமோநாராயணன், சாம்ஸ், ரேகா, சுமித்ரா, நிரோஷா உள்பட 49 பேர் நடித்து வருகிறார்கள். அறிமுக இயக்குனர் கதிர்வேலு டைரக்டு செய்கிறார். இவர், டைரக்டர் சுந்தர் சி.யிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கிறார்.

“மூத்த நடிகர்களுடன் நடித்தது சந்தோஷமாக இருந்தது” -சசிகுமார்
கூ ட்டு குடும்பத்தின் மேன்மையை சொல்லும் படமாக, ‘ராஜவம்சம்’ தயாராகி இருக்கிறது. சசிகுமார்-நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். கதிர்வேலு டைரக்டு செய்திருக்கிறார். டி.டி.ராஜா தயாரித்துள்ளார். படத்தை பற்றி டைரக்டர் கதிர்வேலு கூறியதாவது:-

“இந்த படத்தின் கதையை கேட்டு சசிகுமார், ரொம்ப நன்றாக இருக்கிறது என்றார். தயாரிப்பாளர் கதையை கேட்டதும் என்னை ஒப்பந்தம் செய்தார். நான் யோசித்ததை திரையில் கொண்டுவர உதவினார். நடிகர்-நடிகைகள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். சசிகுமார், நிக்கி கல்ராணி ஆகிய இருவரிடம் மட்டுமே படத்தின் முழு கதையையும் சொன்னேன்” என்றார்.

‘ராஜவம்சம்’ கூட்டு குடும்பத்தை பற்றிய கதை. குடும்பமாக பார்க்கும்போது எல்லோருக்கும் பிடிக்கும். 40 நடிகர்கள் நடிப்பதால் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கும் என்று கருதினோம். ஆனால் தயாரிப்பாளர் ராஜா மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். மூத்த நடிகர்-நடிகைகளுடன் நடித்தது, சந்தோஷமாக இருந்தது.

இத்தனை பேரையும் ஒளிப்பதிவாளர் கையாண்ட விதம், பாராட்டுக்குரியது. அனைவரையும் ஒன்று திரட்டுவது கொஞ்சம் சிரமமாக இருந்தது. போகப்போக சரியாகி விட்டது. படத்தில் நடித்த அனைவரும் சிறந்த கதாபாத்திரங் களாக தெரிவார்கள்” என்றார் சசிகுமார்.

விமர்சனம்

ஒவ்வொரு மாணவரும், மாணவியும் பார்க்க வேண்டிய படம் கமலி பிரம் நடுக்காவேரி - விமர்சனம்

முள் காடுகள் நிறைந்த நடுக்காவேரி என்ற கிராமம்தான் கதைக்களம். அந்த கிராமத்தை சேர்ந்த மாணவி, கமலி. கமலி பிரம் நடுக்காவேரி படத்தின் சினிமா விமர்சனம்.

பதிவு: பிப்ரவரி 22, 04:07 PM

நூதன கொள்ளையர்களும், துப்பறிந்து பிடிக்கும் ராணுவ வீரரும் சக்ரா - விமர்சனம்

போலீஸ் நெருங்க முடியாத அளவுக்கு அதிபுத்திசாலித்தனமாக அந்த கொள்ளைகள் நிகழ்ந்திருப்பதை விஷால் கண்டுபிடிக்கிறார். சக்ரா படத்தின் சினிமா விமர்சனம்.

பதிவு: பிப்ரவரி 22, 03:52 PM

காதலிக்கும் கதாநாயகன் கதாநாயகிக்கு அப்பாக்கள் ஆதரவு, எதிர்ப்பு படம் பாரீஸ் ஜெயராஜ் - விமர்சனம்

ஜான்சன் இயக்கி வெளிவந்த ‘ஏ-1’ படக்குழுவினர் மீண்டும் இணைந்து, ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.

பதிவு: பிப்ரவரி 18, 03:40 PM
மேலும் விமர்சனம்