துப்பறிவாளன்-2


துப்பறிவாளன்-2
x
தினத்தந்தி 6 March 2020 6:48 PM IST (Updated: 6 March 2020 6:48 PM IST)
t-max-icont-min-icon

ஆனந்த் ஷங்கர் டைரக்‌ஷனில் விஷால் ஜோடியாக ரிதுவர்மா - தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஷால், நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், ‘ஆக்‌ஷன்.’ அடுத்து அவர், ‘துப்பறிவாளன்-2’ படத்தில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து, ‘சக்ரா’ என்ற படத்தில் விஷால் நடிக்க இருக்கிறார். அதையடுத்து, ‘அரிமா நம்பி’ படத்தின் டைரக்டர் ஆனந்த் ஷங்கர் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ரிதுவர்மா நடிக்கிறார். இவர், தெலுங்கு பட உலகில் ராசியான நடிகையாக கருதப்படுகிறார். ரிதுவர்மா நடித்த தெலுங்கு படங்கள் வெற்றிகரமாக ஓடியிருப்பதாக பேசப்படுகிறது.

இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ‘வேலையில்லாத பட்டதாரி-2’ படத்தில், ஒரு சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். கவுதம் வாசுதேவ் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் நடித்து இருந்தார்.
1 More update

Next Story