காகித பூக்கள்


காகித பூக்கள்
x
தினத்தந்தி 9 March 2020 10:42 AM GMT (Updated: 9 March 2020 10:42 AM GMT)

முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் ஒரு முக்கோண காதல் கதை, `காகித பூக்கள்’ படத்தின் முன்னோட்டம்.

 `காகித பூக்கள்’ என்ற பெயரில் படமாகிறது. இதுபற்றி அந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து டைரக்டராக அறிமுகம் ஆகிறார், முத்து மாணிக்கம். `காகித பூக்கள்’ படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

``என் காதலி உன் மனைவி ஆகலாம். ஆனால், உன் மனைவி என் காதலி ஆக முடியாது’’ என்ற கருவை அடிப்படையாக வைத்து, இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதுமுகங்கள் ஒலோகன்-பிரியதர்ஷினி ஜோடியுடன், பிரவீண்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் தில்லை மணி, தவசி, பாலு, ரேகா சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இத்தோஷ் நந்தா இசையமைக்கிறார். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.’’

Next Story