சக்ரா விஷால்


சக்ரா விஷால்
x
தினத்தந்தி 13 March 2020 12:13 AM IST (Updated: 19 Feb 2021 3:34 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி! படம் `சக்ரா' படத்தின் முன்னோட்டம்.

விஷால் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம், `சக்ரா.' இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா கசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். தொழில்நுட்ப திகில் படமாக உருவாகி வரும் இந்த படத்தை ஆனந்தன் டைரக்டு செய்கிறார். இவர், டைரக்டர் எழிலிடம் உதவி டைரக்டராக இருந்தவர். `சக்ரா' படம் பற்றி இவர் சொல்கிறார்:-

``சக்ரா படத்தின் கதையை விஷாலிடம் சொன்னதும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த படத்தை நானே தயாரித்து நானே நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். கதாபாத்திரங்கள் எதையும் மாற்ற வேண்டாம். அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு யாரை தேர்வு செய்யலாம்? என்று குழப்பமாக இருந்தது.

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தோம். அதேபோல் ரெஜினா கசன்ட்ரா, ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இவர்களுடன் கே.ஆர்.விஜயா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதி இருக்கிறார். பாலசுப்பிரமணியம், ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு பின்னணியும், முக்கியத்துவமும் இருக்கும். படப்பிடிப்பு சென்னை, கோவை நகரங்களில் நடத்தப்பட்டது. படத்தை மே 1-ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.''
1 More update

Next Story