மருத

பாரதிராஜாவின் உதவியாளர் இயக்கிய தென் மாவட்ட மக்களின் வாழ்வியல் கதை, ‘மருத’ படத்தின் சினிமா முன்னோட்டம்.
டைரக்டர் பாரதிராஜாவிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், கே.ரங்கராஜ், மனோபாலா, மணிவண்ணன், பொன்வண்ணண் உள்பட பலர் டைரக்டராகி இருக்கிறார்கள். இப்போது, ‘மருத’ என்ற படத்தின் மூலம் ஜி.ஆர்.எஸ். டைரக்டர் ஆகியிருக்கிறார். இவர், பாரதிராஜாவிடம் 12 வருடங்கள் உதவி டைரக்டராக இருந்தார். ‘மருத’ படத்தை பற்றி ஜி.ஆர்.எஸ். கூறுகிறார்:
“மதுரையின் பழைய பெயர்தான், ‘மருத.’ இந்த படம், தென் மாவட்ட மக்களின் வாழ்வியல் கதை. கொஞ்சம் கற்பனை கலந்து சுவாரஸ்யம் சேர்த்து இருக்கிறோம். யதார்த்தத்தை மீறாமல், யார் மனதையும் புண்படுத்தாமல் சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்கி இருக்கிறோம்.
காதல், குடும்பப்பாசம், திகில் ஆகிய அம்சங் களை கதையில் கச்சிதமாக சேர்த்து இருக் கிறோம்.
இளையராஜா இசையமைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார், விஜி, சரவணன், மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர். நான், (ஜி.ஆர்.எஸ்.) கதாநாயகனாக நடித்து இருக்கிறேன். விஜியின் மகள் லவ்லின், விஜிக்கு மகளாகவே நடித்து இருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வரும்.”
Related Tags :
Next Story






