முன்னோட்டம்
கால்ஸ்

கால்ஸ்
டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் விஜே சித்ரா, தேவதர்ஷினி ஜெ.சபரிஸ் தமீம் அன்சாரி ஜெ.சபரிஸ்
ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.
Chennai
இன்பைனைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் "கால்ஸ்". ஜெ.சபரிஸ் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை விஜே சித்ரா கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். மேலும் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி , ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: ‘கால்ஸ்’ படத்தில் பி.பி.ஓ.வில் பணிபுரியும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 23 வயது பெண்ணின் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. 

இந்த படத்தின் கதையை நான் சித்ராவிடம் சொன்ன போது நடுவில் நிறுத்தி, இது போன்ற கதைக்காக காத்திருந்தேன். செமையா இருக்கு” என்று கூறினார். இந்த படத்தில் நான் நடிக்கிறேன். மீதமுள்ள கதையை சொல்ல வேண்டாம். முழு படத்தையும் பெரிய திரையில் பார்ப்பேன் என்றார். ஆனால் இப்போது அவர் இல்லை” என கூறினார்.

விமர்சனம்

லண்டனில் இரண்டு மாபியா கும்பலிடம் சண்டையிடும் மதுரை பரோட்டா கடை நாயகன் - ஜகமே தந்திரம் விமர்சனம்

லண்டனில் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ் என்ற இரண்டு மாபியா கும்பல் சண்டை போட்டு வருகிறார்கள். ஜகமே தந்திரம் படத்தின் சினிமா விமர்சனம்.

பதிவு: ஜூன் 30, 05:26 PM

சாதி வெறியை கருவாக கொண்ட படம் கர்ணன் - விமர்சனம்

பொடியன் குளம் என்று ஒரு குக்கிராமம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் சிற்றூர். அந்த ஊருக்கு பஸ் நிறுத்தம் கிடையாது.

பதிவு: ஏப்ரல் 11, 03:44 PM

அரசியல் புயல் வீசிக்கொண்டிருக்கும் இந்த சீசனுக்கு பொருத்தமான படம் மண்டேலா - சினிமா விமர்சனம்

ஊருக்கு நடுவில் உள்ள ஆலமரத்தின் அடியில் ஒரு திறந்தவெளி சலூன். அதை நடத்துபவர், யோகி பாபு. அவரை ஊர் மக்கள் அனைவரும் ‘இளிச்சவாயா’ என்றே அழைக்கிறார்கள்.

பதிவு: ஏப்ரல் 08, 03:40 PM
மேலும் விமர்சனம்