விக்ராந்த் ரோணா


விக்ராந்த் ரோணா
x
தினத்தந்தி 4 March 2021 9:46 PM IST (Updated: 4 March 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

5 மொழிகளில் வெளிவரும் ‘விக்ராந்த் ரோணா’ சினிமா முன்னோட்டம்.

‘நான் ஈ’, ‘புலி’ ஆகிய படங்களில் நடித்த சுதீப் திரையுலகில் நுழைந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், ‘விக்ராந்த் ரோணா’ என்ற பிரமாண்டமான படத்தில் நடித்து இருக்கிறார்.

பொது முடக்க காலத்தை கடந்த பிறகு கன்னட பட உலகில் இருந்து வரும் முதல் பிரமாண்டமான படம், இது. சுதீப் ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, அனூப் பந்தாரி டைரக்டு செய்துள்ளார். ஜாக் மஞ்சுநாத், ஷாலினி மஞ்சுநாத் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. படத்தின் தலைப்பு துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடத்தில் நடந்த படவிழாவில் வெளியிடப்பட்டது.
1 More update

Next Story