காதலிச்சா தப்பா


காதலிச்சா தப்பா
x
தினத்தந்தி 4 March 2021 10:25 PM IST (Updated: 4 March 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

காதலை கையில் பிடித்துக்கொண்டு களம் இறங்கியிருக்கிறார், புதுமுக டைரக்டர் சூரியகுமரன்.

எல்லா உயிர்களுக்கும் காதல் உணர்வு ஒன்றே. ஆனால் மனித காதல் மட்டுமே எதிர்ப்பை சம்பாதிக்கிறது. பல காரணங்களால் காதலர்களை கொல்கிறது. தற்கொலைக்கு தூண்டுகிறது. ஆனால், பிரித்த காதலர்களை சேர்த்து வைக்கிறது, கல்லறை.

காதலித்தால் தப்பா? காதலர்கள் சாகத்தான் வேண்டுமா? என்ற கேள்வியுடன், காதலை கையில் பிடித்துக்கொண்டு களம் இறங்கியிருக்கிறார், புதுமுக டைரக்டர் சூரியகுமரன். இவர் இயக்கும் படத்துக்கு, ‘காதலிச்சா தப்பா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தை சந்தனம் பிலிம்ஸ் சார்பில் எஸ்.சந்திரகுமார் தயாரிக்கிறார். இதில் முரளி ஒளிப்பதிவாளராகவும், ஆர்.டி.மோகன் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்கள். திண்டிவனம், திருச்சி சுற்றுவட்டாரங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

படத்தை கிறிஸ்துமஸ் விருந்தாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
1 More update

Next Story