கிளாப்

‘கிளாப்’ படத்தில்’ ஆதியுடன் பிரகாஷ்ராஜ் இணைந்தார் சினிமா முன்னோட்டம்.
ஆதி கதாநாயகனாக நடிக்க, ‘கிளாப்’ என்ற படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆதிக்கு ஜோடியாக அகன்ஷா சிங், க்ரிஷா குரூப் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். பிரித்வி ஆதித்யா டைரக்டு செய்கிறார். அவர் கூறியதாவது:
“பிரகாஷ்ராஜ் போன்ற சிறந்த நடிகருடன் பணி புரிவது, வளர்ந்து வரும் டைரக்டர்களின் பெரும் கனவு. நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவர் தன்னை திறமையான நடிகராக வடிவமைத்துக் கொண்டார். இந்திய சினிமாவில் பன்மொழிகளிலும் அவர் பணியாற்றிய விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக தரமான படைப்புகளை தந்து இந்திய சினிமாவில் மிக முக்கிய ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார். ‘கிளாப்’ படத்தில் அவர் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி. இன்னொரு முக்கிய வேடத்தில் நாசர் நடிக்கிறார். இவர்களுடன் மைம் கோபி, முனீஷ்காந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இளையராஜாவின் இசை, படத்துக்கு பெரும் தூணாக அமைந்து இருக்கிறது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் படம் தயாராகி வருகிறது.”
Related Tags :
Next Story






