நின்று கொல்வான்


நின்று கொல்வான்
x

3 மொழிகளில் தயாராகும் படம் ‘நின்று கொல்வான்’ சினிமா முன்னோட்டம்.

காதலுடன் அதிரடி சண்டை காட்சிகளும் நிறைந்த படமாக தயாராகிறது, ‘நின்று கொல்வான்’. இது, அமெரிக்கா சென்று குடியேற வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் ஒரு இளைஞரை பற்றிய கதை.

அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, அவருடைய காதலி கடத்தப்படுகிறார். இளைஞர் அமெரிக்கா சென்றாரா, அல்லது காதலியை மீட்டாரா? என்பதை சொல்லும் படம், இது.

அர்ஜுன் சந்த்ரா, யோகி பாபு, ஆசிஷ் வித்யார்த்தி, நிழல்கள் ரவி, கர்ணா டொக்ரா, கீதா ஆகியோர் நடித்துள்ளனர். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். ஜூடா சாண்டி இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடாம் ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வி.பி.சங்கர் டைரக்டு செய்துள்ளார். படம் பெங்களூரு, மைசூர், உடுப்பி ஆகிய இடங்களில் வளர்ந்து இருக்கிறது.
1 More update

Next Story