கூகுள் குட்டப்பா

‘கூகுள் குட்டப்பா’ படத்தில் ரோபோ செய்யும் குறும்புகள்
கமல்ஹாசன்-தேவயானி நடிப்பில், ‘தெனாலி’ படத்தை தயாரித்த டைரக்டர் கே.எஸ்.ரவிகுமாரின் சொந்த பட நிறுவனம், அடுத்ததாக ‘கூகுள் குட்டப்பா’ என்ற நகைச்சுவை படத்தை தயாரித்து வருகிறது. இதில் முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிகுமார் நடிக்க, புதுமுகங்கள் தர்ஷன், லொஸ்லியா ஆகிய இருவரும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள்.
யோகி பாபு, மனோபாலா, மாரிமுத்து, பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்துள்ளனர். சபரிகிரீசன், குரு சரவணன் ஆகிய இருவரும் டைரக்டர்களாக அறிமுகமாகிறார்கள். இருவரும் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி டைரக்டர்களாக பணிபுரிந்தவர்கள்.
‘‘இந்த படத்தில், ஒரு ரோபோ முக்கிய வேடத்தில் நடிக்கிறது. அது செய்யும் குறும்புகள், ஆறில் இருந்து அறுபது வரை அனைத்து தரப்பினரையும் கவரும்’’ என்கிறார்கள் படக்குழுவினர்.
Related Tags :
Next Story






