கென்னி


கென்னி
x
தினத்தந்தி 12 Sep 2021 3:47 PM GMT (Updated: 2021-09-12T21:17:48+05:30)

புவன் நல்லான் இயக்கத்தில் ஈஷான், ஸ்வேதா ஷர்மா, வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கென்னி’ படத்தின் முன்னோட்டம்.

'மோ', 'ஜாம்பி' படங்களை இயக்கிய புவன் நல்லான் இயக்கும் மூன்றாவது படம் 'கென்னி'. 'மியாவ்' படத்தில் நாயகனாக நடித்த ஈஷான் இதில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்வேதா ஷர்மா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் உதவியாளராக இருந்த வில்வா 'கென்னி' படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாவது: “நான் சற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன். படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அதில் 'கென்னி'யும் ஒரு படம்.நான் இதில் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் ஆக நடித்து இருக்கிறேன்.

இந்தப் படம் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர். இயக்குநர் என்னிடம் சொன்ன கதையும் என் கேரக்டரும் எனக்குப் பிடித்திருந்தது. அவர் புத்திசாலித்தனமான திரைக்கதை அமைத்திருக்கிறார். நம் எல்லோருக்கும் திரில்லர் படங்கள் பிடிக்கும். இந்த படத்தின் கதையைச் சொல்ல முடியாது ஏனென்றால் படத்தின் ஒரு காட்சியில் அடுத்த காட்சிக்கான ட்விஸ்ட்  இருக்கும்.

ஒவ்வொரு காட்சியும் அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு பரபரப்பாக இருக்கும். இயக்குநர் ஏற்கெனவே இயக்கிய  படங்களில் த்ரில்லரில் கூட  நகைச்சுவை கலந்து இயக்கி இருப்பார். ஆனால் 'கென்னி' படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது. பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது." என்று வனிதா விஜயகுமார் பாராட்டிக் கூறியிருக்கிறார்.

Next Story