முன்னோட்டம்
அனபெல் சேதுபதி

அனபெல் சேதுபதி
விஜய்சேதுபதி டாப்ஸி தீபக் சுந்தர்ராஜன் கிருஷ்ணா கிஷோர் கவுதம் ஜார்ஜ்
அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அனபெல் சேதுபதி’ படத்தின் முன்னோட்டம்.
Chennai
நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘அனபெல் சேதுபதி’. விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, பிக்பாஸ் மதுமிதா, ஜெகபதி பாபு, ஜார்ஜ் மரியான், வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கவுதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணா கிஷோர் இசையமைத்துள்ளார். பிரதீப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.

விமர்சனம்

நட்பும்... துரோகமும் - நடுவன் விமர்சனம்

ஷாரங் இயக்கத்தில் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நடுவன்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: செப்டம்பர் 26, 09:11 PM

ஆண், பெண் நட்பு சம்பந்தமான கதை - பிரண்ட்ஷிப் படவிமர்சனம்

மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் 4 நண்பர்களை சுற்றி நடக்கும் கதை பிரண்ட்ஷிப். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்த முதல் படம்.

அப்டேட்: செப்டம்பர் 21, 09:12 PM
பதிவு: செப்டம்பர் 21, 04:36 PM

தாயின் கனவை நனவாக்க துடிக்கும் மகன் - கோடியில் ஒருவன் விமர்சனம்

ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா, ராமச்சந்திர ராஜு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: செப்டம்பர் 20, 03:14 AM
மேலும் விமர்சனம்