வாஸ்கோடகாமா


வாஸ்கோடகாமா
x
தினத்தந்தி 14 Sept 2021 3:11 PM IST (Updated: 14 Sept 2021 3:11 PM IST)
t-max-icont-min-icon

நகுல் நடிப்பில் உருவாக இருக்கும் வாஸ்கோடகாமா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 100 பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும் 'வாஸ்கோடகாமா' படத்தை மலேசியாவில் பல பெரிய நிறுவனங்கள் நடத்தும் டத்தோ பி.சுபாஷ்கரன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, எழுதி இந்தப் படத்தை ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் பேசும்போது, "படத்தின் கதாநாயகனின் பாத்திரப் பொருத்தம் கருதியே படத்துக்கு 'வாஸ்கோடகாமா' என்கிற பெயர் வைக்கப்பட்டது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதுதான் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை. குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்? அவனது மனநிலையும் குணாம்சமும் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப்பின் எப்படி மாறும் என்பதைக் கற்பனையாக ஜாலியான காட்சிகளோடு சொல்லும் படம்தான் 'வாஸ்கோடகாமா'.

இப்படத்தின் கதாநாயகனாக நகுல் நடிக்கிறார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர். படத்தின் கதாநாயகி, வில்லன் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்' என்றார்.

படத்திற்கு ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இசை - என்.வி.அருண். சண்டைக்காட்சிகள்- விக்கி. கலை இயக்கம்- ஏழுமலை ஆதிகேசவன். எடிட்டிங் தமிழ்க்குமரன். நடனக்காட்சிகளை பிக்பாஸ் புகழ்  நடன இயக்குநர் சாண்டி அமைக்கிறார். படப்பிடிப்பு சென்னையிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது.
1 More update

Next Story