சூ மந்திரகாளி


சூ மந்திரகாளி
x
தினத்தந்தி 14 Sep 2021 1:38 PM GMT (Updated: 14 Sep 2021 1:38 PM GMT)

ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூ மந்திரகாளி’ படத்தின் முன்னோட்டம்.

ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ சூ மந்திரகாளி’. புதுமுக நடிகர் கார்த்திகேயன் வேலு கதாநாயகனாக நடிக்க கன்னட சினிமாவை சேர்ந்த சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன் கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயோன், வி..ஶ்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அன்னம் மிடியாஸ் சார்பாக அன்னக்கிளி வேலு இப்படத்தை தயாரிக்க பிரபல இயக்குனர் சற்குணம் வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக இப்படத்தை வழங்குகிறார். இப்படத்திற்கு முகமது பர்ஹாண் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சதிஷ் ரகுநாதன் இசையமைக்க, நவிப் முருகன் பின்னனி இசை அமைத்துள்ளார்.

பங்காளியூர் என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பகையையே வாழ்க்கையாக கொண்டு பில்லி சூனியம் வைத்து ஒருவரை ஒருவர் கெடுத்துக்கொள்கிறார்கள். கதாநாயகன் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து திருத்துவதற்காக அவர்கள் பாணியிலேயே பில்லி-சூனியகாரனை கூட்டி வர உள்ள பில்லி சூனியம் வைப்பதை மட்டுமே தொழிலாக கொண்ட கொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்ற கிராமத்திற்கு செல்கிறான்.

அங்கு மிகவும் சக்தி வாய்ந்த அழகான பதுமையாக இருக்கும் கதாநாயகியை பார்த்ததும், அவளை காதலித்து தனது கிராமத்திற்கு அழைத்து சென்றால் தனது பங்காளிகளை திருத்தலாம் என திட்டம் தீட்டுகிறான். ஆனால் பங்காளியூர் மக்கள் இவ்வளவு அழகான பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் மீது கொண்ட பொறாமையால் அவர்களது காதலுக்கு தடைகளை ஏற்படுத்த இறுதியில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா? பங்காளியூர் திருந்தியதா? என்பதை நகைச்சுவையாக சொல்லும் படமே ‘ சூ மந்திரகாளி’.

Next Story