யானை


யானை
x
தினத்தந்தி 1 Oct 2021 11:36 AM GMT (Updated: 1 Oct 2021 11:36 AM GMT)

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்தின் முன்னோட்டம்.

அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி, ‘கே.ஜி.எப்.’ புகழ் கருடா ராம், ஐஸ்வர்யா, ரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

படத்தை பற்றி இயக்குனர் ஹரி கூறியதாவது: ‘‘சூர்யாவை வைத்து, ‘சிங்கம்’ என்று படம் எடுத்தது போல், அருண் விஜய்யை வைத்து, ‘யானை’ என்று படம் எடுத்து வருகிறோம். கதாநாயகன் யானையைப்போல் பலமானவன் என்பது படம் பார்க்கும்போது தெரியும்.

கிராமத்து பின்னணியில் தயாராகும் திகில் படம், இது. தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். 3 சண்டை காட்சிகள் உள்பட படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டன. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது’’ என்றார்.

Next Story