''சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் இணைந்து நடிக்கும் 'மாயோன்'


சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன்  இணைந்து நடிக்கும் மாயோன்
x

‘‘சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் ‘மாயோன்’ படத்தில் முதன்முதலாக ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.

மாயோன் மாறுபட்ட திரைக்கதை. கடவுள், அறிவியல், சிலை கடத்தல், புதையல் வேட்டை என பரபர திகில் படமாக தயாராகி வருகிறது. படத்தின் திரைக்கதையை தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அமைத்துள்ளார்'' என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் என்.கிசோர். இவர் மேலும் கூறும்போது...

''இந்த படத்தின் திரைக்கதை ஒரு புதிய களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள நடிகர்_நடிகைகள் அனைவரும் பொருத்தமாக அமைந்தார்கள். எல்லோரும் சேர்ந்து நிறைய உழைத்து இருக்கிறோம்.

இசையமைப்பாளராக இளையராஜா கிடைத்தது, வரம். படத்தின் கதை இந்தியா முழுக்க எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய கதை'' என்றார்.

''இண்டியானா ஜோன்ஸ், டாவின்சி கோட் படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுபோன்ற ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்ற என் நீண்டகால ஆசை, இந்த படத்தின் மூலம் நிறைவேறியது. இது, சாமி படம் அல்ல. அதைத்தாண்டி நிறைய இருக்கிறது'' என்று படத்தின் கதாநாயகன் சிபி சத்யராஜ் கூறினார்.

''மாயோன் படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது'' என்று கதாநாயகி தான்யா ரவிச்சந்திரன் சொன்னார்.


Next Story