23 மணி நேரத்தில் உருவான படம்


23 மணி நேரத்தில் உருவான படம்
x

'பிதா' என்ற திரைப்படத்தை 23 மணி நேரம் 23 நிமிடத்தில் இயக்கிய சுகன் குமார், அடுத்து கதை, திரைக்கதை எழுதி டைரக்டு செய்துள்ள படம் 'கலைஞர் நகர்.' இந்த திரைப் படத்தை 22 மணி 53 நிமிடத்தில் இயக்கி முடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தப் படத்தில் பிரஜின் நாயகனாகவும், ஶ்ரீபிரியங்கா நாயகியாகவும் நடித்துள்ளனர். லிவிங்ஸ்டன், ஐஸ்வர்யா, திருக்குறழி, விஜய் ஆனந்த், ரவி, ரஞ்சித் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குனர் சுகன் குமார் கூறும்போது, ``இந்த சிறிய படத்தை பிரமாண்டமாக எடுத்துள்ளோம். இந்தப் படத்தை 23 மணி நேரத்துக்கு முன்னதாகவே முடித்து விட்டோம். மேடை நடனக் கலைஞர்களை மையப்படுத்தி உண்மை சம்பவம் கதையாக தயாராகி உள்ளது. படத்தில் பாடல், சண்டை, காமெடி என அனைத்து அம்சங்களும் உள்ளன. சிவராஜ் தயாரித்துள்ளார்.

ஒளிப்பதிவு: இளையராஜா, இசை: நரேஷ்.

1 More update

Next Story