மீண்டும் நாயகனாக முகேன்


மீண்டும் நாயகனாக முகேன்
x
நடிகர்: முகேன்  டைரக்ஷன்: கவின் இசை: ஜென் மார்ட்டின் ஒளிப்பதிவு : ஜிஜு சன்னி

`வேலன்' படத்தை இயக்கிய கவின் டைரக்டு செய்யும் புதிய படத்தில் முகேன் நாயகனாக நடிக்கிறார். `பிக்பாஸ்' மூலம் பிரபலமான முகேன் முதலில் `வேலன்' படத்தில் நாயகனாக அறிமுகமானார். மேலும் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது மீண்டும் நாயகனாக நடிக்கிறார். இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது. கிரைம், திரில்லர் கதையம்சத்தில் உருவாகிறது. படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை

படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில் நடக்க உள்ளது. ஜி.மணிக்கண்ணன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு: ஜிஜு சன்னி, இசை: ஜென் மார்ட்டின். ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க உள்ளனர்.

1 More update

Next Story