இலவச பயிற்சி வகுப்பு


இலவச பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 21 Aug 2023 5:47 PM IST (Updated: 21 Aug 2023 6:12 PM IST)
t-max-icont-min-icon

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023-ம் ஆண்டு திட்ட நிரலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு 6 ஆயிரத்து 553 காலிப்பணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3 ஆயிரத்து 587 காலிப்பணியிடங்களும் டி.ஆர்.பி.-டெட் தேர்வு நடப்பு ஆண்டில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு படிப்பதற்கு தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421 2999152, 94990 55944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் அனைவரும் இந்த பயிற்சியில் சேர்ந்து படித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story