சரவணன் இருக்க பயமேன்

கதையின் கரு: இளம் அரசியல்வாதியின் காதல் - தேசிய கட்சியில் பொறுப்பில் இருக்கும் மதன்பாப் டெல்லியில் கட்சியை உடைத்து புதிய கட்சி ஆரம்பித்து அதன் தமிழக தலைவராக சூரியை நியமிக்கிறார்.
வேலையில்லாமல் சுற்றி திரியும் உதயநிதி ஸ்டாலினும் யோகி பாபுவும் அந்த கட்சியில் இணைகின்றனர். ஊர் திருவிழாவுக்கு நடன அழகியை வரவேற்று அச்சிடும் சுவரொட்டியில் குடிகார போட்டாகிராபர் படங்களை மாற்றி விட ரணகளமாகிறது.
சூரிக்கு பதில் தலைவர் உதயநிதி என்று படத்தை அவர் வைத்து விடுகிறார். தாதா மன்சூர் அலிகானின் சுவரொட்டியில் சூரி அரிவாளுடன் நிற்பதுபோன்ற படம் இடம்பெறுகிறது. சூரியை பிடிக்க போலீஸ் விரட்டுகிறது. அவர் தப்பிக்க துபாய் சென்று விடுகிறார். இதனால் தலைவர் பதவி உதயநிதி ஸ்டாலின் கைக்கு வருகிறது.
வெளியூரில் இருக்கும் ரெஜினாவின் வீட்டை கட்சி அலுவலகமாக மாற்றி அரசியல் பணிகளில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் ரெஜினா பெற்றோருடன் திரும்பி வந்து கட்சி ஆபீசை காலி செய்து வீட்டை ஒப்படைக்கும்படி மிரட்டுகிறார். துபாயில் இருந்து திரும்பும் சூரியும் தலைவர் பதவியை அபகரித்து விட்டதாக உதயநிதி மீது பகையாகிறார்.
ரெஜினாவும் சூரியும் கைகோர்த்து உதயநிதியை பழிவாங்க திட்டமிடுகின்றனர். அப்போது ரெஜினா மீது உதயநிதிக்கு காதல் மலர்கிறது. ஆனால் ரெஜினா, தாதாவின் மகன் சாம்சை மணக்க தயாராகிறார். அப்போது விபத்தில் இறந்த ஒரு பெண்ணின் ஆவி உதயநிதிக்கு உதவிக்கு வருகிறது. ஆவியாக வரும் பெண் யார்? உதயநிதியும் ரெஜினாவும் சேர்ந்தார்களா? என்பது மீதி கதை.
இளம் அரசியல்வாதியாக வருகிறார் உதயநிதி. சர்ச்சையில் சிக்கிய சூரியை தலைமறைவாகும்படி வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு அவரது தலைவர் பதவியை அபகரிக்கும் சீன்களில் தியேட்டரை குலுங்க வைக்கிறார். ரெஜினா பின்னால் ஒரு தலைக்காதலில் சுற்றுவது, ஆவி உதவியுடன் அவருக்கு நிச்சயமான திருமணத்தை நிறுத்த முயற்சிப்பது ரசிக்க வைக்கிறது. ஆவியை அழைத்துப்போய் உயிரோடு இருக்கும் அதன் பெற்றோரை சந்திக்க வைக்கும் காட்சியில் நெகிழவும் வைக்கிறார். நடனமும் நன்றாக வருகிறது. சண்டையிலும் வேகம் காட்டி இருக்கிறார்.
ரெஜினா துறுதுறுவென வருகிறார். உதயநிதியுடன் இவர் மல்லுக்கட்டும் சீன்கள் ரசனை. உடலில் ஆவி புகுந்ததும் முறைப்பாகி ‘அடிடா அவனை’ என்று உதயநிதியை உசுப்பேற்றி ரவுடிகளை நொறுக்க வைக்கும் சீனில் அதிர வைக்கிறார். சிருஷ்டி டாங்கே சிறிது நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார். முடிவு பரிதாபம்.
சூரி, யோகி பாபு, சாம்ஸ், மனோபாலா நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக வைத்து உள்ளனர். மன்சூர் அலிகான் சிரிப்பு வில்லனாக வருகிறார். பிரியாணிக்காக கட்சியை உடைக்கும் மதன்பாப், மாணவியை பலாத்காரம் செய்யும் பேராசிரியராக வரும் சக்தி, லிவிங்ஸ்டன், ரோபோ சங்கர், ரவிமரியா, நித்யா ஆகியோரும் கதாபாத்திரங்களில் அழுத்தம் பதிக்கின்றனர். கதையை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். சிரிக்க வைக்கும் நோக்கில் காட்சிகளை நகர்த்தி அதில் தேறியும் இருக்கிறார் இயக்குனர் எழில். டி.இமான் இசையில் எம்புட்டு இருக்கு ஆசை பாடல் மனதை வருடுகிறது. கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவும் காட்சிகளை மெருகூட்டி இருக்கிறது.

Related Tags :
Next Story