விமர்சனம்
உறுதிகொள்

உறுதிகொள்
கிஷோர், காளி வெங்கட் மேகனா ஆர்.அய்யனார் ஜூட் வினிகர் பாண்டி அருணாசலம்
உறுதிகொள் படத்திற்கான சினிமா விமர்சனத்தை பார்க்கலாம்.
Chennai
பிளஸ்-2 மாணவர் கிஷோர். இவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் மேகனாவுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் நெருங்கி பழகுவது மேகனாவின் தந்தைக்கு தெரிய வருகிறது. காதலை அவர் எதிர்க்கிறார். படிப்பு ஏறாமல் பரீட்சையில் காப்பி அடிக்கும் கிஷோர் கையும் களவுமாக பிடிபட்டு பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

இதனால் படிப்பு நின்று போகிறது. தந்தையும் வீட்டில் இருந்து அடித்து வெளியேற்றுகிறார். இதனால் நண்பர்களுடன் குடி கும்மாளம் என்று ஊர் சுற்றுகிறார். அடிதடியில் சிறைக்கும் சென்று வருகிறார். இன்னொரு புறம் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சில இளைஞர்கள் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டுகின்றனர். நகைபறிப்பிலும் ஈடுபடுகிறார்கள்.

கோவில் விழாக்களுக்கு சென்று அங்கு வரும் இளம்பெண்களை கடத்தவும் செய்கின்றனர். கிஷோரின் தோழி இவர்களிடம் சிக்குகிறாள். கிஷோரின் தங்கையும், காதலி மேகனாவும் அடுத்தடுத்து கடத்தப்படுகிறார்கள்.

மேகனாவை கடத்தியதாக கிஷோர் மீது பழி விழுந்து அவரை போலீஸ் தேடுகிறது. மூன்று பெண்களும் மீட்கப்பட்டார்களா என்பது ‘கிளைமாக்ஸ்.’
படிப்பு ஏறாத பள்ளி மாணவன் கதாபாத்திரத்தில் வருகிறார் கிஷோர்.

வகுப்பறைக்குள் காதலியுடன் தனியாக இருக்கும்போது ஆசிரியர்களிடம் சிக்கி விட்டு விடும்படி கெஞ்சும்போதும் காளி வெங்கட்டை வைத்து தேர்வில் காப்பி அடித்து தன்னால் மற்ற மாணவர்கள் பாதிக்க கூடாது என்று உண்மையை ஒப்புக்கொண்டு வெளியேறும்போதும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

அடிதடியிலும் ஆவேசம் காட்டி இருக்கிறார். மேகனா காதல் காட்சிகளில் கவர்கிறார். காளி வெங்கட் சிரிக்க வைக்கிறார். கேள்வித்தாளை திருடி வெளியில் நின்று சத்தம் போட்டு அவர் விடைகளை சொல்வது தியேட்டரை குலுங்க வைக்கிறது.

பள்ளிப் பருவ காதல் ஜோடியின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்களை விறுவிறுப்பாகவும் யதார்த்தமாகவும் பதிவு செய்து இருக்கிறார், இயக்குனர் அய்யனார். பிற்பகுதி கதையில் இன்னும் வலுசேர்த்து இருக்கலாம். பாண்டி அருணாச்சலம் கேமரா செஞ்சி கோட்டையை கண்முன் நிறுத்தி பிரமிக்க வைக்கிறது. ஜூட் வினிகரின் பின்னணி இசை கதையோட்டத்துக்கு உதவி இருக்கிறது.

முன்னோட்டம்

கால்ஸ்

ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 26, 06:01 AM

குட்டி லவ் ஸ்டோரி

தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

பதிவு: பிப்ரவரி 15, 02:29 AM

ட்ரிப்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 05, 10:06 PM
மேலும் முன்னோட்டம்