விமர்சனம்
உள்குத்து

உள்குத்து
அட்டகத்தி தினேஷ், பாலசரவணன், ஜான் விஜய், நான் கடவுள் ராஜேந்திரன், ஸ்ரீமன் , சமையல்கலை நிபுணர் தாமோதரன், நந்திதா, சாயாசிங் கார்த்திக்ராஜு ஜஸ்டின்பிரபாகரன் பி.கே.வர்மா
கதாநாயகனுக்கும், தாதாவுக்கும் இடையேயான யுத்தம். ''உள்குத்து'' என்ற படத்தின் விமர்சனம்.
Chennai
கதையின் கரு: ஒரு மீனவ குப்பத்துக்கு புதுசாக வந்து சேருகிறார், தினேஷ். இவருக்கும், பாலசரவணனுக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. தினேசை, பாலசரவணன் தனது வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைக்கிறார். தினேசுக்கும், பாலசரவணனின் தங்கை நந்திதாவுக்கும் இடையே காதல் அரும்புகிறது.

அதே ஊரை சேர்ந்த தாதா சரத். ஊரையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் இவருடைய தம்பியை தினேஷ் அடித்து துவைத்து விடுகிறார். தினேசை, சரத் கொல்ல முயல்கிறார். அவருக்கும் மரண பயத்தை காட்டி விடுகிறார், தினேஷ். “உன்னைப்போல் ஒரு புத்திசாலியான முரடன் தான் எனக்கு தேவை” என்று தினேசை, சரத் தனது அடியாட்கள் கும்பலில் சேர்த்துக் கொள்கிறார்.

சரத்தின் விசுவாசி போல் நடித்து, அவருடைய தம்பியை தினேஷ் கொன்று விடுகிறார். தம்பியை கொன்றவர் தினேஷ் தான் என்று சரத்துக்கு தெரியவரும் போது தினேஷ் என்ன ஆகிறார்? அவர் ஏன் சரத்தின் தம்பியை கொன்றார்? சரத் உயிருக்கும் ஏன் குறி வைக்கிறார்? இந்த கேள்விகளுக்கு படத்தின் இரண்டாம் பாகத்தில் பதில் இருக்கிறது.

தினேஷ், அதிரடி கதாநாயகன் ஆகியிருக்கிறார். சரத்தின் அடியாளை புரட்டி எடுக்கும் ஆரம்ப சண்டை காட்சியிலேயே தினேஷ் வியக்க வைக்கிறார். அவருக்கும், நந்திதாவுக்கும் இடையே மெதுவாக மலரும் காதல், அந்த அளவிலேயே கடைசி வரை கண்ணியமான காதலாய் நீடிக்கிறது. ஒரே அடியில் வில்லன் ஆட்களை மிரள வைக்கும் தினேஷ், சண்டை காட்சிகளில் ஆச்சரியப்படுத்துகிறார்.

அழகான நந்திதாவை அளவோடு பயன்படுத்தி இருக்கிறார், டைரக்டர் கார்த்திக் ராஜு. காதலனும் அடியாள் வேலை செய்கிறானே என்ற ஆதங்கத்தில் அவர் தினேசிடம் கோபித்துக் கொள்ளும் இடம், ‘மெர்சல்.’ வசன காமெடியில் பாலசரவணன், ‘பாஸ் மார்க்’ வாங்கி விடுகிறார். சரத், திலீப் சுப்பராயன் ஆகிய இருவரும் வில்லன்களாக போட்டி போட்டு மிரட்டுகிறார்கள். ஸ்ரீமன், ஜான் விஜய், சாயாசிங் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களாக கவனம் ஈர்க்கிறார்கள்.

பி.கே.வர்மா ஒளிப்பதிவில் கடலும், கடல் சார்ந்த பகுதிகளும், கண்கொள்ளா காட்சிகள். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், பாடல்கள் நினைவில் நிற்கவில்லை. பின்னணி இசை, காட்சிகளோடு ஒன்ற வைக்கின்றன. படத்தின் முதல் பாதி காதலும், மோதலுமாக இருந்தாலும், பதற்றம் கூட்டுகிறது. இரண்டாம் பாதியில், சற்றே வேகம் குறைகிறது. யூகிக்க முடியாத காட்சிகள், திரைக்கதையின் பலமாக அமைந்துள்ளன.

குறிப்பாக வில்லனின் கபடி ஆட்டம், உறைய வைக்கிறது.

முன்னோட்டம்

மோகினி

“சிங்கம் 2” படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் “மோகினி”.

கடைக்குட்டி சிங்கம்

“இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக, சாயிஷா நடிக்கிறார். சத்யராஜ், கார்த்தி இருவரும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார்கள். பானுப்ரியா, பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

செம போத ஆகாதே

“போதையில் முடிவு எடுக்கக் கூடாது...அதுவும் செம போதையில் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. அப்படி ஒரு முடிவு எடுத்தால், அது நம்மை வாட்டி வதைத்து விடும். இந்த கருவை அடிப்படையாக வைத்தே ‘செம போத ஆகாதே’ படத்தை நகைச்சுவையாக உருவாக்கி இருக்கிறோம்”

மேலும் முன்னோட்டம்