நாச்சியார்

டைரக்டர் பாலாவிடம் இருந்து ஒரு பெண் போலீஸ் கதை. போலீஸ் அதிகாரியாக ஜோதிகா நடித்து இருக்கிறார்.
ஒரு பணக்கார வீட்டின் வேலைக்காரி, இவனா. இவருக்கும், எடுபிடி வேலை செய்யும் ஜீ.வி.பிரகாஷ்குமாருக்கும் காதல். இன்னும் திருமண வயதை அடையாத இவனாவும், ஜீ.வி.பிரகாஷ்குமாரும் ஒரு சந்தர்ப்பத்தில் உடலாலும் இணைகிறார்கள். இவனா கர்ப்பமாகிறார். அதற்கு காரணம், ஜீ.வி.பிரகாஷ்குமார்தான் என்று எல்லோரும் நம்புகிறார்கள். அவர் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்படுகிறது.
யாருக்கும் பயப்படாத துணிச்சலான போலீஸ் அதிகாரி ஜோதிகா, இந்த கற்பழிப்பு வழக்கில் விசாரணை நடத்துகிறார். இவனாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. மரபணு பரிசோதனையில், அந்த குழந்தைக்கு தந்தை ஜீ.வி.பிரகாஷ்குமார் அல்ல என்ற உண்மை தெரியவருகிறது.
அப்படியானால் குழந்தைக்கு தந்தை யார்? என்ற கேள்வி, விசாரணை அதிகாரி ஜோதிகா முன்பு விசுவரூபம் எடுத்து நிற்கிறது. இவனாவிடம் துருவி துருவி விசாரிக்கிறார். குற்றவாளி பிடிபடாமல், பெரிய சவாலாக கண்ணாமூச்சி காட்டுகிறான். ஒவ்வொரு முடிச்சாக விசாரணை நடத்தி, குற்றவாளியை நெருங்குகிறார், ஜோதிகா. அவரிடம் அந்த குற்றவாளி சிக்கும்போது, அவனுடைய பணபலமும், மேட்டுக்குடி அந்தஸ்தும் கைது செய்யவிடாமல் தடைகளை ஏற்படுத்துகின்றன.
அந்த தடைகளை ஜோதிகா எப்படி உடைத்து, காக்கி உடைக்கு பெருமை சேர்க்கிறார்? என்பது மீதி கதை.
ஜோதிகா எந்த பெண் போலீஸ் அதிகாரியிடம் பயிற்சி எடுத்தாரோ? காக்கி உடையும், கம்பீரமும் அவருக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்தியிருக்கிறது. அவருடைய நடை-உடை-பாவனைகள், குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தும் தோரணை என அத்தனையிலும் போலீஸ் அதிகாரியின் மிடுக்கு. அவருடைய சொந்த குரல், நிறையவே கைகொடுத்து இருக்கிறது. காக்கி உடைக்கு கவுரவம் சேர்த்த ‘சிங்கத்துக்கு’ சரியான போட்டி, நாச்சியார்!
இசையைப் போலவே மென்மையான தோற்றம் கொண்ட ஜீ.வி.பிரகாஷ்குமாரை, காத்தவராயன் என்ற அழுக்கு பையனாக மாற்றியிருக்கிறார், பாலா. ஜீ.வி.பிரகாஷ்குமார் அழுது புரளும் காட்சியில், அனுதாபம் அள்ளுகிறார். இவருக்கும், இவனாவுக்கும் இடையேயான காதலும், ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அக்கறையும் மனதுக்கு நெருக்கமாக அமைந்துள்ளன. இவனாவை இனி நிறைய படங்களில் பார்க்கலாம். ஜோதிகாவுடன் சக போலீஸ் அதிகாரியாக வரும் ராக்லைன் வெங்கடேஷ், பொருத்தமான தேர்வு.
குற்றவாளியை ஜோதிகா கைது செய்வதுடன் நிறுத்தியிருக்கலாம். அவனை குப்பை மேட்டுக்கு கொண்டு போய் நரம்புகளை துண்டிப்பது, குரூரம்.
காட்சிகளை வேகமாக நகர்த்தும் பின்னணி இசையில், இளையராஜாவின் முத்திரைகள். ஒரு அப்பாவி ஏழைப்பெண்ணின் கற்பை அவளுக்கே தெரியாமல் சூறையாடும் மேட்டுக்குடி மனிதனும், அவனை கண்டுபிடித்து கைது செய்யும் பெண் போலீஸ் அதிகாரியும் என்ற இரண்டு வரி கதையை விறுவிறுப்பான திரைக்கதை ஆக்கியிருக்கிறார், டைரக்டர் பாலா. வசனங்கள், சில இடங்களில் கைதட்ட வைக்கின்றன. “சாமிக்கும் பொழுது போகணும் அல்லவா?” என்ற குறும்பான வரிகள், ஒரு உதாரணம். குற்றவாளி யார்? என்ற ‘சஸ்பென்சை’ கடைசி வரை காப்பாற்றியிருப்பது, புத்திசாலித்தனம்.

Related Tags :
Next Story