விமர்சனம்
முதலாளியாக இருந்தாலும் பரோட்டா மாஸ்டராக வேலை பார்ப்பது, தத்து குழந்தைகளை பிரிக்க சதி செய்யும் காதலியை உதறி தள்ளுவது - இரும்பு மனிதன்

முதலாளியாக இருந்தாலும் பரோட்டா மாஸ்டராக வேலை பார்ப்பது, தத்து குழந்தைகளை பிரிக்க சதி செய்யும் காதலியை உதறி தள்ளுவது - இரும்பு மனிதன்
சந்தோஷ் பிரதாப், மதுசூதனன், கஞ்சா கருப்பு அர்ச்சனா டிஸ்னி கே.எஸ். மனோஜ் கே.கோகுல்
சொந்த ஓட்டலில் முதலாளியாக இருந்தாலும் பரோட்டா மாஸ்டராக வேலை பார்ப்பது, தத்து குழந்தைகளை பிரிக்க சதி செய்யும் காதலியை உதறி தள்ளுவது என்று கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார். படம் "இரும்பு மனிதன்" விமர்சனம் பார்க்கலாம்.
Chennai
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த சந்தோஷ் பிரதாப் வளர்ந்ததும் சொந்தமாக ஓட்டல் நடத்துகிறார். மூன்று அனாதை சிறுவர்களை தத்தெடுத்து வளர்த்து, அவர்களுக்காக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். வீட்டில் திருட வரும் கஞ்சா கருப்பை உதவியாளராக வைத்துக் கொள்கிறார்.

ஓட்டல் தொழிலில் நல்ல வருமானம் குவிய செல்வந்தர் ஆகிறார். ஆனால் தத்து மகன்கள் பணத்தை கிரிக்கெட் சூதாட்டத்தில் கட்டி ஊதாரியாகிறார்கள். தொழில் எதிரி மதுசூதனனுடன் சேர்ந்து சதி செய்து சொத்துகளை தங்கள் பெயருக்கு மாற்றி சந்தோஷ் பிரதாப்பை வீட்டை விட்டும் வெளியேற்றுகின்றனர். அவரது நிலைமை என்னவாகிறது என்பது மீதி கதை.

சந்தோஷ் பிரதாப்புக்கு முழு கதையையும் தாங்கும் அழுத்தமான வேடம். அதை நிறைவாக செய்துள்ளார். ஓட்டலில் மிச்சமாகும் உணவுகளை ரோட்டோர ஏழைகளுக்கு கொடுப்பது, முதலாளியாக இருந்தாலும் பரோட்டா மாஸ்டராக வேலை பார்ப்பது, தத்து குழந்தைகளை பிரிக்க சதி செய்யும் காதலியை உதறி தள்ளுவது என்று கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார்.

வயதான பிறகு அமைதியான நடிப்பால் மனதில் நிற்கிறார். சொத்துகளை பிடுங்கி தத்து மகன்கள் வீட்டை விட்டு வெளியே தள்ளும்போது பரிதாபப்பட வைக்கிறார். காதலியாக வந்து போகிறார் அர்ச்சனா. ஆரம்பத்தில் கலகலப்பும் பிற்பகுதியில் குணசித்திர நடிப்பையும் நேர்த்தியாக கொடுத்துள்ளார் கஞ்சா கருப்பு.

மதுசூதனன் வில்லத்தனம் காட்டுகிறார். மகன்களாக வரும் நிஷாந்த், அகில், திலீப் முவரும் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர். தத்து மகன்கள் என்ற உண்மை தெரியும்போது உணர்ச்சியே காட்டாமல் நிற்பது நெருடல். ஜோசப் பேபியின் அழுத்தமான கதையை சமூக அக்கறையோடு விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் டிஸ்னி. கே.எஸ்.மனோஜ் இசையும், கோகுல் ஒளிப்பதிவும் பக்கபலம்.

முன்னோட்டம்

கால்ஸ்

ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 26, 06:01 AM

குட்டி லவ் ஸ்டோரி

தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

பதிவு: பிப்ரவரி 15, 02:29 AM

ட்ரிப்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 05, 10:06 PM
மேலும் முன்னோட்டம்