விமர்சனம்
மலைவாழ் பழங்குடியினர் வசிக்கும் இடத்தில் தொழிற்சாலை கட்ட முயற்சிக்கும் கார்ப்பரேட் நிறுவனம் - வெல்வெட் நகரம்

மலைவாழ் பழங்குடியினர் வசிக்கும் இடத்தில் தொழிற்சாலை கட்ட முயற்சிக்கும் கார்ப்பரேட் நிறுவனம் - வெல்வெட் நகரம்
ரமேஷ் திலக் வரலட்சுமி சரத்குமார் மனோஜ் அச்சு ராஜாமணி பகத்குமார்
சமூக சேவகர் கஸ்தூரியிடம் கார்ப்பரேட் நிறுவனத்தின் மோசடிகளை அம்பலப்படுத்தும் ரகசிய ஆவணம் கிடைக்கிறது. அதை தொலைக்காட்சி நிருபர் வரலட்சுமியிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறார். படம் "வெல்வெட் நகரம்" - விமர்சனம்.
Chennai
மலைவாழ் பழங்குடியினர் வசிக்கும் இடத்தை அபகரித்து தொழிற்சாலை கட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம் முயற்சிக்கிறது. அதை எதிர்க்கும் சமூக சேவகர் கஸ்தூரியிடம் கார்ப்பரேட் நிறுவனத்தின் மோசடிகளை அம்பலப்படுத்தும் ரகசிய ஆவணம் கிடைக்கிறது. அதை தொலைக்காட்சி நிருபர் வரலட்சுமியிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறார்.

அப்போது கஸ்தூரி கொலை செய்யப்படுகிறார். அந்த ரகசிய ஆவணத்தை வரலட்சுமி தேடி அலைகிறார். சாவதற்கு முன்பு தனது தோழி மாளவிகா சுந்தர் வீட்டுக்கு கஸ்தூரி வந்து சென்ற தகவலை வரலட்சுமி அறிகிறார். ரகசிய ஆவணம் அவரது வீட்டில் இருக்கலாம் என்று கருதுகிறார்.

அப்போது ஒரு ரவுடி கும்பல் அந்த வீட்டுக்குள் நுழைந்து வரலட்சுமியையும், அங்கு இருப்பவர்களையும் அடித்து உதைத்து கட்டிப்போடுகிறது. அவர்கள் நிலைமை என்ன ஆகிறது? ஆவணம் வரலட்சுமியிடம் கிடைத்ததா? என்பது மீதி கதை.

“கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார் வரலட்சுமி. போலீஸ் பாதுகாப்பை மீறி கொலை செய்யப்பட்ட கஸ்தூரி வீட்டுக்குள் புகுந்து ஆதாரங்களை தேடுவதும், துப்பு துலக்குவதும் திகிலூட்டுகின்றன. ரவுடிகள் பிடியில் சிக்கி தவிப்பு காட்டுகிறார். கஸ்தூரி சமூக சேவகியாக வந்து போகிறார். மாளவிகா சுந்தர் கணவரை காப்பாற்ற போராடும் காட்சிகளில் அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.

அர்ஜாய் வில்லத்தனத்தில் மிரட்டி உள்ளார். மலைப்பகுதியில் பழங்குடிகளுக்கு நடக்கும் கொடுமையை எதிர்க்கும் கஸ்தூரி கொலை செய்யப்படும் காட்சியுடன் எதிர்பார்ப்போடு படம் தொடங்குகிறது. பெரும்பகுதி காட்சிகள் வீட்டுக்குள்ளேயே முடங்குவது தொய்வு. அதையும் மீறி கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாதபடி விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் மனோஜ்குமார் நடராஜன்.

பகத் குமாரின் ஒளிப்பதிவும், சரண் ராகவனின் பின்னணி இசையும் காட்சியோடு ஒன்ற வைக்கிறது.

முன்னோட்டம்

பொன்மகள் வந்தாள்

ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் கதை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.

பதிவு: மே 29, 11:09 PM

மாஸ்டர்

விஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார் படம் "மாஸ்டர்" சினிமா முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 17, 05:33 AM

சக்ரா

போலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி! படம் `சக்ரா' படத்தின் முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 13, 12:13 AM
மேலும் முன்னோட்டம்

ஆசிரியரின் தேர்வுகள்...