விமர்சனம்
11 மணி நேரத்தில் தயாரானது என்ற சாதனையுடன் வெளிவந்திருக்கும் படம் - தப்பா யோசிக்காதீங்க விமர்சனம்

11 மணி நேரத்தில் தயாரானது என்ற சாதனையுடன் வெளிவந்திருக்கும் படம் - தப்பா யோசிக்காதீங்க விமர்சனம்
பி.சுந்தரபாண்டியராஜா ஜோதிசா, சனிலா சுல்தான்ஸ் ஸ்டெர்லின் நித்யா எஸ்.ஆர்.வெற்றி
ஒரு நிறுவனத்தில் வேலை செய்த கதாநாயகன், அவனுடைய நண்பன் செய்த தவறு காரணமாக வேலையில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்யப்படுகிறான். தப்பா யோசிக்காதீங்க படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
Chennai
கதை, குடும்ப பின்னணியில் ஒரு கருத்தை சொல்கிறது. ஒரு நிறுவனத்தில் வேலை செய்த கதாநாயகன், அவனுடைய நண்பன் செய்த தவறு காரணமாக வேலையில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்யப்படுகிறான்.

அவனை மனைவி அவமரியாதை செய்வதுடன், வேலைக்கு போகிறாள். கணவனை வேலைக்காரரை விட, கேவலமாக நடத்துகிறாள். இதை கவனித்து வரும் வீட்டு வேலைக்கார பெண், கதாநாயகனுக்கு வலைவீசுகிறாள். அதில் சிக்காமல், கதாநாயகன் அவளுக்கு புத்திமதி சொல்கிறான்.

இதை தவறாக புரிந்துகொண்ட அவனுடைய மனைவி, கணவன் மீது சந்தேகப்படுகிறாள். நொந்துபோன கதாநாயகன் ஒரு முடிவு எடுக்கிறான். அது என்ன முடிவு? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.

கதாநாயகனாக பி.சுந்தரபாண்டியராஜா, இவருடைய மனைவியாக ஜோதிசா, வேலைக்கார பெண்ணாக சனிலா ஆகிய மூவரும் கதாபாத்திரங்களாக மாற முயற்சித்து இருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரம் மோனிகா, உச்சக்கட்ட காட்சியில் நெகிழவைக்கிறாள்.

குடிகாரராக வரும் சுப்புராஜ், பழைய பேப்பர்காரராக வரும் சிசர் மனோகர் ஆகிய இருவரும் தமாஷ் பண்ணுகிறார்கள். ஸ்டெர்லின் நித்யா இசையில் பாடல்களும், அதை படமாக்கியிருக்கும் விதமும் கவரவில்லை. பின்னணி இசையில், வாத்தியங்களின் இரைச்சல்.

சுல்தான்ஸ் இயக்கியிருக்கிறார். வேலையில்லாத கணவரின் நிலையை எடுத்து சொன்னவிதம், உயிரோட்டமான காட்சிகள். படத்தின் இரண்டாம் பாகம், வேகம். அந்த தம்பதிகளின் வீட்டுக்கு ஒருவர் பின் ஒருவராக வந்து செல்வது, நம்பும்படியாக இல்லை. வசன காட்சி மூலம் திருநங்கைகளை கவுரவப்படுத்தியிருப்பதும், கதாநாயகனின் கதாபாத்திரத்தை கடைசிவரை நேர்மையாக கொண்டு சென்றிருப்பதும், பாராட்டுக்குரியவை.

முன்னோட்டம்

கால்ஸ்

ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 26, 06:01 AM

குட்டி லவ் ஸ்டோரி

தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

பதிவு: பிப்ரவரி 15, 02:29 AM

ட்ரிப்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 05, 10:06 PM
மேலும் முன்னோட்டம்