கொடைக்கானலுக்கு போகும் புதுமண தம்பதிகளுக்கு ஏற்படுகிற கனத்த சோகம் படம் லோகா - விமர்சனம்

கொடைக்கானலுக்கு போகும் புதுமண தம்பதிகளுக்கு ஏற்படுகிற கனத்த சோகம் லோகா படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
புதிதாக திருமணமான ஒரு இளம் தம்பதிகள், சென்னையில் இருந்து கொடைக்கானல் வருகிறார்கள். அவர்கள் தங்கியிருக்கும் பங்களாவில் ராம்தேவ், ராஜுவர்மா, நரேந்திரன் ஆகிய வயதான கோடீஸ்வரர்கள் மூன்று பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
அவர்களை கொலை செய்தது யார், கொலைகளுக்கான காரணம் என்ன? என்று போலீஸ் விசாரிக்கிறது. விசாரணையில், திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கிறது. ‘பிளாஷ்பேக்’கில் கதை பின்நோக்கி செல்கிறது. கதாநாயகனும், நாயகியும் பள்ளிக்கூட மாணவர்-மாணவியாக, காதலர்களாக வருகிறார்கள். அந்த காதலே அவர்களின் வாழ்க்கையில், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அது என்ன? என்பது மீதி கதை.
கொடைக்கானலுக்கு போகும் இளம் தம்பதிகளாக குமார் எஸ்.சும், அக்சதா மாதவ்வும் வருகிறார்கள். புதுமண தம்பதிகளுக்கே உரிய கொஞ்சல்களும், குலவல்களும், கிளுகிளுப்பு. லோகாவாக வரும் விஷ்மயா விஸ்வநாத், முகவசீகரமான நாயகி. இவருடைய முடிவு, கனத்த சோகம்.
எஸ்.உதயசங்கரின் கேமரா, கேரளத்து அழகை அள்ளி வந்து இருக்கிறது. பின்னணி இசையில், இரைச்சல் அதிகம். டி.எஸ்.திவாகர் டைரக்டு செய்து இருக்கிறார். அமானுஷ்யம் தொடர்பான காட்சிகளில், திகில் போதாது. இன்னும் பதற்றத்தை கூட்டியிருந்தால், படம் பேசப்பட்டிருக்கும்.
Related Tags :
Next Story