நாயகனின் உளவியல் மாற்றம்: ‘க்’ சினிமா விமர்சனம்


நாயகனின் உளவியல் மாற்றம்: ‘க்’ சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 19 Dec 2021 3:41 PM IST (Updated: 19 Dec 2021 3:41 PM IST)
t-max-icont-min-icon

கால்பந்தாட்ட வீரனின் உளவியல் பிரச்சினையை பின்னணியாகக் கொண்டு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது ‘க்.’

கால்பந்து வீரர் வசந்த் சந்திரசேகர் பயிற்சியில் ஈடுபடும்போது ஒரு புறா பந்தில் அடிபட்டு சாகிறது. தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும்போது ஒரு சிறுமி வெறித்து பார்க்கிறார். விளையாட்டில் தலையில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார். ஆஸ்பத்திரியின் ஜன்னல் வழியே தோட்டத்தில் ஒரு கொலை நடப்பதையும் பார்க்கிறார். போலீசார் விசாரித்து அங்கு கொலை நடக்கவில்லை என்று உறுதி செய்கின்றனர். இந்த சம்பவங்கள் வசந்த் சந்திரசேகருக்கு உளவியல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அவரது வாழ்க்கை பின்னனி என்ன? சொன்னபடி கொலை நடந்தது உண்மையா? உளவியல் பிரச்சினைகளில் இருந்து மீண்டாரா என்பது மீதி கதை. 

வசந்த் சந்திரசேகர் என்ற தேசிய விளையாட்டு வீரர் கதாபாத்திரத்தில் யோகேஷ் கச்சிதமாக பொருந்துகிறார். உளவியல் பிரச்சினைகளாலும் தந்தை இருந்தும் அவரது பாசத்தை பெற முடியாத தவிப்பையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறார். குருசோமசுந்தரம் கதையின் முடிச்சுக்களை அவிழ்க்கும் கனமான கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பணிவு காட்டும் அவரது இன்னொரு பக்கம் அதிர வைக்கிறது. அனகா அன்பான மனைவியாக வருகிறார் . படுக்கையில் நெருக்கமும் காட்டுகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் நரேன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கால்பந்து வீரரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து அடுத்து என்ன என்ற திகிலோடு காட்சிகளை நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் பாபு தமிழ். கதையை புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுவதை தவிர்த்து இருக்கலாம். கவாஸ்கர் அவினாஷ் பின்னணி இசை காட்சியோடு ஒன்ற வைக்கிறது. ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவும் விறுவிறுப்புக்கு உதவி இருக்கிறது

1 More update

Next Story