காரிமங்கலம், பாலக்கோடு பேரூராட்சிகளில் இன்று ரூ.10¼ கோடி மதிப்புள்ள திட்டப்பணிகள் தொடக்கம்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்அடிக்கல் நாட்டுகிறார்


காரிமங்கலம், பாலக்கோடு பேரூராட்சிகளில் இன்று ரூ.10¼ கோடி மதிப்புள்ள திட்டப்பணிகள் தொடக்கம்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்அடிக்கல் நாட்டுகிறார்
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 1:46 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

காரிமங்கலம், பாலக்கோடு பேரூராட்சிகளில் இன்று ரூ.10¼ கோடி மதிப்புள்ள திட்ட பணிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டுகிறார்.

காரிமங்கலம் பேரூராட்சி

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய பேரூராட்சிகளில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொண்டு ரூ.10 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்குகிறார். காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் ஏற்பாட்டின் பேரில் காலை 9.30 மணிக்கு ரூ.75 லட்சம் மதிப்பில் காரிமங்கலம் உழவர் சந்தை அமைக்கும் பணி, ரூ.2 கோடியே 13 லட்சம் மதிப்பில் காரிமங்கலம் வார சந்தையில் 80 கடைகள், புதிய சாலை மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணி உள்ளிட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் அரசு விழாவில் அவர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

பாலக்கோடு பேரூராட்சி

மேலும் பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி ஏற்பாட்டின் பேரில் பாலக்கோட்டில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் 60 அடி ஆழத்தில் 4 ராட்சத புதிய கிணறு அமைத்து அதன் மூலம் பாலக்கோடு பேரூராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு 2022-2023-ம் ஆண்டு அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், நகரின் பல்வேறு பகுதிகளில் ரூ.88 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, ரூ.83 லட்சத்தில் பாலக்கோடு பேரூராட்சி பஸ் நிலையத்தில் மேம்பாட்டு பணி, ரூ.79 லட்சத்து 79 ஆயிரத்தில் பாலக்கோடு வளமீட்பு பூங்காவில் உயிரி அகழ்வாய்வு (பயோ மைனிங்) பணி, ரூ.13 லட்சத்து 68 ஆயிரத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பேட்டரி மூலம் இயங்கும் 9 குப்பை வாகனங்கள் வழங்குதல் என மொத்தம் ரூ.7 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 5 திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள், பேரூராட்சி துறை அலுவலர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்கிறார்கள்.


Next Story