டி.சிவா தயாரிக்கிறார் வெங்கட் பிரபு டைரக்‌ஷனில், புதிய படம்


டி.சிவா தயாரிக்கிறார் வெங்கட் பிரபு டைரக்‌ஷனில், புதிய படம்
x
தினத்தந்தி 20 Dec 2016 12:54 PM IST (Updated: 20 Dec 2016 1:07 PM IST)
t-max-icont-min-icon

‘தெய்வ வாக்கு’ முதல் அடுத்து வெளிவர இருக்கும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ வரை 19 படங்களை தயாரித்திருப்பவர், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா. இவர் தயாரிக்கும் 20-வது படத்தை வெங்கட் பிரபு டைரக்டு செய்கிறார். ஏற்கனவே, ‘சரோஜா’ படத்தில் இணைந்து பணிபுரிந்த டி.சிவா, வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இந்த படத்தின் மூ

‘தெய்வ வாக்கு’ முதல் அடுத்து வெளிவர இருக்கும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ வரை 19 படங்களை தயாரித்திருப்பவர், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா. இவர் தயாரிக்கும் 20-வது படத்தை வெங்கட் பிரபு டைரக்டு செய்கிறார்.

ஏற்கனவே, ‘சரோஜா’ படத்தில் இணைந்து பணிபுரிந்த டி.சிவா, வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைய இருக்கிறார்கள். இதுபற்றி டி.சிவா கூறியதாவது:-

“சென்னை-28 இரண்டாம் பாகம் படத்தின் வெற்றி எங்களை பெரும் மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. அடுத்து நாங்கள் உருவாக்கும் பெயர் சூட்டப்படாத புதிய படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று உறுதியாக நம்புகிறோம்.

இந்த படத்தின் நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.”
1 More update

Next Story