தாமதத்துக்கு காரணம் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் நடித்து இதுவரை ‘ரஜினி முருகன்,’ ‘ரெமோ,’ ‘பைரவா’ ஆகிய மூன்று படங்கள் திரைக்கு வந்துள்ளன.
அதற்குள் அவர் பிரபலமாகி விட்டார். தற்போது அவர் பெரிய சம்பளம் வாங்கிக் கொண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவருடைய நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் தெலுங்கு படம், ‘நேனு லோக்கல்.’
இந்த படம் அறிவிக்கப்பட்ட தேதியில் திரைக்கு வரவில்லை. ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போனதற்கு கதாநாயகன் நானிக்கும், தயாரிப்பாளர் தில் ராஜுக்கும் ஏற்பட்ட பிரச்சினைதான் காரணம் என்று கூறப்பட்டது.
இதை நானி மறுத்து இருக்கிறார். கீர்த்தி சுரேசின் ‘கால்ஷீட்’ பிரச்சினைதான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டி இருக்கிறார். கீர்த்தி சுரேஷ், பிரபல கதாநாயகர்களுடன் நடித்து வருகிறார். அதனால் அவர் சொன்ன தேதிகளில் படப்பிடிப்புக்கு வரவில்லை. அதனால்தான் படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போனது” என்று அவர் கூறியிருக்கிறார்!

Next Story