அமெரிக்காவில் நடிப்பு பயிற்சி! சாக்‌ஷி அகர்வால்


அமெரிக்காவில் நடிப்பு பயிற்சி! சாக்‌ஷி அகர்வால்
x
தினத்தந்தி 27 Feb 2017 2:40 PM IST (Updated: 27 Feb 2017 3:03 PM IST)
t-max-icont-min-icon

யூகன், திருட்டு வி.சி.டி, ஆத்யன், கககாபோ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர், சாக்‌ஷி அகர்வால்.

தற்போது ஜீவன் நடித்து வரும் ‘ஜெயிக்கிற குதிரை’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் அமெரிக்கா சென்று திரும்பியிருக்கிறார். தனது அமெரிக்க அனுபவம் பற்றி சாக்‌ஷி அகர்வால் கூறுகிறார்:-

“நான், என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படித்த பட்டதாரி. 100-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்து இருக்கிறேன். நடிப்பில் என்னை மேம்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்கா சென்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அந்த பள்ளியில் ஏற்கனவே ஸ்ரீதேவியின் மகள் ஜானவி கபூர், ரன்பீர் கபூர், இம்ரான்கான் ஆகியோர் நடிப்பு பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அங்கு நடிப்பில் எட்டு வகையான நுணுக்கங் களையும், பூட்டி பேர் என்ற நடனத்தையும், கிக் பாக்சிங்கையும் கற்றுக் கொண்டு சென்னை திரும்பியிருக்கிறேன்!”
1 More update

Next Story