தூத்துக்குடி ரவுடி வேடத்தில், நிவின் பாலி


தூத்துக்குடி ரவுடி வேடத்தில், நிவின் பாலி
x
தினத்தந்தி 3 March 2017 1:17 PM IST (Updated: 3 March 2017 1:17 PM IST)
t-max-icont-min-icon

‘பிரேமம்’ பட புகழ் நிவின் பாலியும், நட்ராஜ் சுப்பிரமணியமும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்த படத்தை கவுதம் ராமச்சந்திரன் டைரக்டு செய்கிறார். படத்துக்கு, ‘ரிச்சி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

பிரகாஷ்ராஜ், ஷ்ரதா சீனிவாஸ், ராஜ்பரத், சந்திரமவுலி, லட்சுமி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் கவுதம் ராமச்சந்திரன் கூறியதாவது:

“ரிச்சி படத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை பழுது பார்க்கும் ‘மெக்கானிக்’ கதாபாத்திரத்தில் நட்ராஜ் சுப்பிரமணியமும் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரையும் மையப்படுத்தி, படத்தின் கதை நகரும்.

‘ரிச்சி’ என்பது நிவின்பாலி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர். தமிழில் முதல் முறையாக, இந்த படத்தில் அவர் சொந்த குரலில் பேசியிருக்கிறார். 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. வருகிற கோடை விடுமுறைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.”

1 More update

Next Story