கவர்ச்சிக்கு குறுக்குவழி இல்லை
பாலிவுட்டுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்தும் ‘பளிச்’சென்று கட்டுடலும், கவர்ச்சியுமாக காணப்படுகிறார், பிபாஷா பாசு.
பாலிவுட்டுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்தும் ‘பளிச்’சென்று கட்டுடலும், கவர்ச்சியுமாக காணப்படுகிறார், பிபாஷா பாசு. அவருடன் உரையாடுவோம்!
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை?
‘‘உங்களுக்குத் தெரியும்...’’
உங்கள் கைப்பையில் எப்போதும் இருக்கும் 3 பொருட்கள்?
அலர்ஜி மாத்திரைகள், ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகள், வீட்டுச் சாவிகள்.
எந்த சூப்பர் சக்தி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
அனைத்து இனிப்புகள், சுவையான உணவுகளையும் சாப்பிட வேண்டும், அதேநேரம் எடை கூடாமல் இருக்க வேண்டும். அதுவே நான் விரும்பும் சூப்பர் சக்தி.
நீங்கள் செய்த ஏதாவது ஒரு வேடிக்கையான செயல்?
ஒருமுறை ஒரு ரசிகர் என்னிடம் வந்து, ‘நீங்கள் பிபாஷா பாசுதானே?’ என்று கேட்டார். நான் உடனே, ‘இல்லை... நான் ராணி முகர்ஜி’ என்றேன். ஏன் என்றால் ராணி முகர்ஜி எனக்கு மிகவும் பிடித்த நடிகை.
ஆணிடம் உங்களை ஈர்க்கும் 3 விஷயங்கள்?
நல்ல முகம், ‘பிட்’டான மனமும் உடம்பும், அபார நகைச்சுவை உணர்வு.
உங்களின் மூடநம்பிக்கை?
என் குறுக்கே ஒரு பூனை போனால் அப்படியே நின்றுவிடுவேன்.
சிறுவயதில் நீங்கள் அதிக திட்டு வாங்கிய விஷயம்?
சிறுவயதில் நான் திட்டு வாங்கியதே இல்லை. அந்த அளவுக்கு ரொம்ப நல்ல பெண் நான். ஆனால் பெற்றோர் வெளியே சென்று, அக்காவுடன் நான் தனியே இருக்கும்போது மட்டும் கொஞ்சம் வால்தனம் செய்வேன்.
திருமணத்துக்குப் பிறகு உங்களிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றமாக நீங்கள் உணரும் விஷயம்?
நான் மேலும் சந்தோஷமாக ஆகியிருக்கிறேன்.
உங்கள் கணவர் கரண்சிங் குரோவரிடம் உங்களை எரிச்சல்படுத்தும் விஷயம்?
அவர் சில விஷயங்களை என்னைவிட மெதுவாக அணுகுவார். அதுதான் அவரிடம் எனக்குப் பிடிக்காதது.
வீட்டில் நீங்கள் தனியாக இருக்கும்போது ரகசியமாக செய்யும் விஷயம்?
ஏதாவது இனிப்பை சாப்பிட்டுக்கொண்டே டி.வி. பார்ப்பேன்.
உங்களைப் பற்றி நீங்களே சொல்லும் ஒரு கிசுகிசு?
வேண்டாமே! ஏற்கனவே என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் உலா வருகின்றன.
உங்கள் உடலில் நீங்கள் மாற்றிக்கொள்ள விரும்பும் பாகம்?
எனது பெரிய பாதங்கள்.
நீங்கள் உங்கள் உடல் தோற்றம் பற்றி எப்போதாவது கவலைப்பட்டதுண்டா?
முன்பெல்லாம் நான் எனது உடம்பு பற்றியோ, ஆரோக்கியம் பற்றியோ அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டேன். 23 வயதில் எனக்கு எலும்புச் சிதைவு நோய் ஏற்படும்வரை நாம் ரொம்ப சோம்பேறியாகத்தான் இருந்தேன். ஆனால் அதன்பிறகு எனது வாழ்க்கை மாறிவிட்டது... நல்லவிதமாக. நான் என் உடம்பை மதிக்கத் தொடங்கினேன்.
உங்களின் நிறம் காரணமாக ஏதாவது பாகுபாட்டைச் சந்தித்திருக்கிறீர்களா?
ஆம், நான் படங்களில் நடிக்கத் தொடங்கியபோது, எனது நிறத்தை வைத்து, ‘இவர் வித்தியாசமானவர்’ என்று பேசினார்கள்.
‘பிட்னசில்’ நீங்கள் ரொம்ப கவனமாக இருந்தாலும், எந்த உணவை உங்களால் தவிர்க்க முடியாது?
நான் ஒரு சாப்பாட்டுப் பிரியை. எந்த நல்ல உணவையும் என்னால் ருசி பார்க்காமல் இருக்க முடியாது. அதிலும் லட்டு எனது பெரிய பலவீனம்.
புதிதாக ‘ஜிம்’முக்கு போக விரும்பும் பெண்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை?
உடம்பை ஆரோக்கியமாகவும் கச்சிதமாகவும் ஆக்குவதற்கு குறுக்குவழி எதுவும் கிடையாது. அதற்குரிய காலம் ஆகத்தான் செய்யும். நல்ல நோக்கத்துக்காக உடற்பயிற்சி செய்யுங்கள். அதாவது, ஒல்லியாக வேண்டும் என்று எண்ணாமல், நல்ல உடல்தகுதி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
கஷ்டமாக இருக்கிறது என்று உடற்பயிற்சியை பாதியில் விட்டுவிடாதீர்கள். வலியின்றி வாழ்க்கையில்லை. உடற்பயிற்சி ஒரு பழக்கமாகும் வரையில் தொடருங்கள்.

Next Story