“22 வயதில் அவ்வளவு தெளிவாக இருக்கிறார்!” கார்த்திக் நரேன்
புதுமுக டைரக்டர்களை அனுபவம் மிகுந்த டைரக்டர்கள் பாராட்டுவது புதுசு அல்ல என்றாலும், ‘துருவங்கள் 16’ படத்தின் வெற்றி விழாவில்,
அந்த படத்தின் டைரக்டர் கார்த்திக் நரேனை டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு படி மேலே போய் மனம் திறந்து பாராட்டினார். அவர் பேசியது:
“சினிமா துறை திறமையாளர்களை வரவேற்கும். அதிலும், தமிழ் திரையுலகம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வரவேற்கும். இதற்கு ஒரு பெரிய உதாரணம், கார்த்திக் நரேன். 22 வயது பையன் இவ்வளவு நேர்த்தியாக படம் இயக்கி பார்த்ததில்லை. இந்த படத்தின் ‘பர்ஸ்ட் லுக் போஸ்டரை’ வெளியிட்டேன். அப்போது, “நான் உங்கள் ரசிகர்” என்று கார்த்திக் நரேன் தெரிவித்தார். இந்த படத்தை பார்த்துவிட்டு, நான் அவருடைய ரசிகராக மாறிவிட்டேன். இவருடைய அடுத்த படம் எப்படியிருக்கும்? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
கார்த்திக் நரேனின் அடுத்த (‘நரகாசுரன்’) படத்தை அவரோடு இணைந்து தயாரிக்கிறேன். 22 வயதில், அவ்வளவு தெளிவாக இருக்கிறார்.
முழுக்கதையுடன் அவர் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, எனக்கே பொறாமையாக இருக்கிறது. எல்லா நடிகர்களும் அவரோடு இணைந்து படம் செய்ய வேண்டும்.”

Next Story