லட்சுமி மேனன் தந்தையாக சித்ரா லட்சுமணன்


லட்சுமி மேனன் தந்தையாக சித்ரா லட்சுமணன்
x
தினத்தந்தி 1 April 2017 1:30 PM IST (Updated: 1 April 2017 1:30 PM IST)
t-max-icont-min-icon

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்த சித்ரா லட்சுமணன்,

அந்த படத்தை தயாரித்த வாசன் விசுவல் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘யங் மங் சங்’ படத்தில், லட்சுமி மேனனின் தந்தையாக நடிக்கிறார்.

பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் தங்கர் பச்சான், காளி வெங்கட், ஆர்.ஜே.பாலாஜி, கும்கி அஸ்வின், டைரக்டர் நாராயணமூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரவீந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரீஷ் இசையமைக்கிறார். ‘முண்டாசுப்பட்டி,’ ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த அர்ஜுன் டைரக்டு செய்கிறார்.

கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படம், கும்பகோணத்தில் வளர்ந்து வருகிறது.

Next Story