சிறப்பு பேட்டி

விஜய்யின் அமைதி ரொம்ப பிடிக்கும்! நித்யா மேனன் + "||" + actress nithya menon favorite hero actor vijai

விஜய்யின் அமைதி ரொம்ப பிடிக்கும்! நித்யா மேனன்

விஜய்யின் அமைதி ரொம்ப பிடிக்கும்! நித்யா மேனன்
“விஜய், ரொம்ப அமைதியானவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அந்த அமைதிதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்கிறார், நித்யா மேனன். இவர், விஜய்யுடன் அவருடைய 61-வது படத்தில், மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி நித்யா மேனன் கூறும்போது, “விஜய், படப்பிடிப்பு தளத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். நடிப்பு தவிர வேறு எந்த விஷயத்திலும் அவர் தலையிடுவதில்லை. அவருடைய அமைதி எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த விஷயத்தில் அவரிடம் இருந்து மற்றவர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்”என்றார்.

ஒரு படத்தை டைரக்டு செய்யப்போவதாக வெளிவந்த தகவல் பற்றி கேட்டபோது, “அந்த தகவலில் உண்மையில்லை. ஒரு நடிகையாக இன்னும் நான் திருப்தி அடையவில்லை. இதுவரை நான் நடித்த வேடங்களில், எனக்கு திருப்தி ஏற்படவில்லை” என்று அவர் கூறினார்!