“பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்வேன்” ஆதி சொல்கிறார்
‘மரகத நாணயம்’ படத்தை அடுத்து ஆதி நடிக்கும் புதிய படங்கள் பற்றி நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“மரகத நாணயம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அந்த படத்தை பொருத்தவரை கதைதான் கதாநாயகன். இதுபோன்ற தரமான கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன். அடுத்து ஒரு தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறேன். அறிமுக இயக்குனர் ஒருவர் டைரக்டு செய்கிறார். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறோம்.
தெலுங்கில் ராம்சரணுடன், ‘ரங்கஸ்தளம் 1985’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். இது, அண்ணன்-தம்பி கதை. ராம்சரணின் அண்ணனாக நான் நடிக்கிறேன். நானியுடன், ‘நின்னு கோரி’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன். வில்லன் கதாபாத்திரமோ அல்லது இரண்டு கதாநாயகர்களுடன் நடிப்பதிலோ எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. எந்த ஒரு கதையிலும் என்னுடைய கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா? என்பதுதான் எனக்கு முக்கியம். தெலுங்கை விட, தமிழ் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறேன்.
எனக்கு என் குடும்பத்தினர் பெண் பார்த்து வருகிறார்கள். அவர்கள் நிச்சயம் செய்யும் பெண்ணையே திருமணம் செய்து கொள்வேன்.”

Related Tags :
Next Story